பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வி: (தயக்கத்துடன்).நான் உயிருக்குயிரா விரும்புறது. சாந்த : கலா நீயே சாட்சி.ரவி...தைரியமா சொல்லணும். பணம் தானே நீ விரும்புறது... ரவி : இல்லீங்க...நான் கலாவைத்தான் உயிருக்குயிரா விரும்புறேன்... சாந்த ரவி! என்னப்பா, என்னை இக்கட்டான சூழ்நிலையில சிக்க வச்சுட்டியே! நீ உயிருக்குயிரா விரும்புறதைத் தானே நான் கேட்கணும்னு வந்தேன்...நீயோ பொண் ணுன்னு சொல்றே! இப்ப நான் இதை எதிர்பார்க்கவே இல்லியே! நான்...என்ன பண்றது? நானும் அதையே தான் கேட்கவேண்டியிருக்குது... ரவி : சார். நீங்க என்ன சொல்றீங்க?...(பதட்டத்துடன்) கலா : ஐயா...என்னங்க இது...என்னையா நீங்க கேட்கு lங்க...? சாந்த வேற வழியேயில்லே...இது எனக்கும் ரவிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம்...எனக்கு ஒன்னு வேணும்ன, ரவி அதைக் கொடுத்துத்தான் ஆகணும்... கலா: * இதுல நானும் சம்பந்தப்பட்டிருக்கேன்...நான்... நான் முடியாதுன்னு மறுத்தா, உங்களாலே ஒண்ணும் வற்புறுத்த முடியாது! நான் ஒரு சுதந்திரப் பறவை. எனக்கும், அவருக்கும் அன்பைத் தவிர வேறு சொந்தமும் இல்லே, பந்தமும் இல்லே. ரவி: கலா. கொஞ்சம் பொறுமையா இரு... சார். நான் உயிருக்குயிரா விரும்பற என் கலாவை நீங்க கேட்குறது அவ்வளவு நல்லா இல்லீங்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/61&oldid=777125" இலிருந்து மீள்விக்கப்பட்டது