பக்கம்:நலமே நமது பலம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

மூக்கு, வாய், தொண்டைப் பகுதிகளில் உள்ள இரத்த நுண் குழாய்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும் அல்லது ஏதாவது நோயின் பாதிப்பு இந்தத் தந்துகிகளைத் தாக்கியிருந் தாலும், இரத்தக் கசிவும், இரத்தப்பெருக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

மூச்சுக் குழல் நுரையீரல் குழாய்கள் போன்ற பகுதிகள் அழற்சிக்குண்டாகி பாதிக்கப்பட்டிருந்தாலும், நிமோனியா காய்ச்சல், என்புருக்கி நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற வியாதிகள் ஏற்பட்டிருந்தாலும், சுவாசிக்கும்பொழுது அந்நியப் பொருள்கள் மூச்சுப் பாதையுள் புகுந்திருந்தாலும் இரத்தம் வருவதுண்டு. வாந்தியில் இரத்தம்:

வாந்தி எடுக்கும்போது அதில் இரத்தம் வெளிப்பட்டால், இதை மிகவும் சீரியசாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

எதனால் வாந்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிப்பது மிகவும் முக்கியம்.

அமிலம் வயிற்றிலிருந்தால் வரும் ரத்தம் காபி கலரில் இருக்கும். அதிகமாக மதுபானம் அருந்துதல்:

தேவைக்கு மேலே மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுதல், ஆஸ்பரின் மாத்திரைகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளுதல் எல்லாம், குடல் பகுதிகளை அதிகம் பாதித்து சேதப்படுத்தி விடுவதால்தான், வாந்தியுடன் இரத்தமும் சேர்ந்து வருகிறது.

குடற்புண் இருந்தாலும், குடலில் கட்டுகள் ஏற்பட்டிருந் தாலும், வயிற்றுப் புற்றுநோய் வந்திருந்தாலும் வாந்தியில் இரத்தம் வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/178&oldid=690990" இலிருந்து மீள்விக்கப்பட்டது