பக்கம்:நலமே நமது பலம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

13. காயம் பட்டவர்களைக் கொண்டு செல்வது எப்படி?

காயம் என்றால் புண் என்று பொருள். தோலின் மேற்பகுதியில் சிராய்ப்பு, தேய்ந்து போதல், பிய்ந்து போதல், தசை தெரிவது போலப் புண்ணாகுதல் இவை போன்ற புண்களை சிறுகாயம் என்று அழைப்பார்கள்.

தோலின் உட்புறம் மட்டுமல்ல. உள்ளுருப்புகளும் பாதிக்கப்படுவதையும், உருக்குலைக்கப் படுவதையும், செயல்படாமல் சீரழிக்கிற தன்மையையும் வைத்து, அவற்றைப் பெரும் காயங்கள் என்பார்கள். பயங்கர காயங்

களுக்குத்தான் பத்திரமான முதலுதவி தேவைப்படுகிறது.

இனி, காயம்பட்டவர்களை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது என்கிற பாதுகாப்பான முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. மருத்துவ உதவி உடனே கிடைக்கிறது என்றால் மட்டுமே விபத்தில் சிக்கியவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த முயலலாம்.

அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடும் என்ற அவசர நிலை அமைந்தாலும், அப்புறப்படுத்தலாம். அப்படி இல்லாவிடில், அவர்களைக் கொண்டு செல்ல முயற்சிப்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்திவிடும். *

2. அதிக இரத்தப்போக்கு, மூச்சுத் திணறல், மூச்சடைப்பு மற்றும் விஷத்தால் ஏற்பட்ட ஆபத்துக்களுக்குத்தான் அவசர நிலைமை ஏற்படும். s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/112&oldid=690921" இலிருந்து மீள்விக்கப்பட்டது