பக்கம்:நலமே நமது பலம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E நமது ui 223 2. நீந்தும்போது நிகழும் விபத்துக்கள்:

1. நீந்தத் தெரியாமலேயே நீச்சல் குளம் அல்லது ஆறு குளம், ஏரி, கடல் போன்ற பகுதிகளிலும் இறங்கி நீந்த முயலுதல்.

2. நீந்தத் தெரிந்தும் ஆழத்திற்குள் போய் சிக்கிக் கொள்ளுதல்.

3. நெடுந்துரம் தனியே நீந்திப் போய் மீண்டும் கரைக்குத் திரும்பி வர முயலும்போது இயலாமல், களைத்துப் போய் தண்ணிருள் மூழ்கி விடுதல். -

4. பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்பதற்காக, அபாயகரமான நீர்ப் பகுதிகளுக்குத் துணிந்து சென்று மீள முடியும் என்று வீரம் பேசிச் செயல்படுதல்.

5. யாரும் துணையில்லாமல் ஆழ் நீர்ப்பகுதியில் நீந்துதல்.

6. மேலேயிருந்து தண்ணிருள் குதிக்கும்போது சுவற்றில் அல்லது உள்ளே பதித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் மீது மோதி அல்லது அடித்தரை பாகத்தில் மோதி மண்டை உடைந்து விடுதல்.

7. அல்லது அதனால் உள்ளுக்குள்ளேயே மூர்ச்சை யாகிப் போதல்.

8. அல்லது கைகால் செயலிழந்து விடுதல் அல்லது கழுத்து முறிந்து போதல்.

9. தவறாகக் குதித்து அடிவயிறு அடிபட்டு உள்ஸ்ரீப் புக்கள் தடுமாறி இயங்காமல் போய் விடுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/225&oldid=691042" இலிருந்து மீள்விக்கப்பட்டது