பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ரவி : டேய்...நான் லட்சியவாதிடா...எனக்கு உழைப்பு தான் மூலதனம்! கிடைக்குற பணம் எனக்கு வழிகாட்டி யாக இருக்குமே தவிர, வாழாவெட்டி ஆக்காது, அவ்வளவுதான்...ம்...இப்ப பசிக்குது. அதுக்கே வழி யில்லே...எட்டாத பணத்துக்குக் கொட்டாவி விட்டா என்ன பண்றது? தாரா : ரவி... ஒரு பிரெண்டு வர்ரான்... கடன் கேட்டுட்டு: வர்ரேன்... நான் வர்ர வரைக்கும் எங்கேயும் போயி டாதே... (போகிருன்) ரவி : போய்ட்டு வா... கடவுளே... என்னேட திறமையை இந்த உலகத்துக்குக் காட்ட, ஒரு சந்தர்ப்பம் கொடு... நினைச்சபடி வரையக்கூடிய திறமையை நிறைய கொடுத் துட்டு, இப்படி கைகளைக் கட்டிப் போட்டிருக்கியே... நீ செய்யறது நியாயந்தான? சாந்த தம்பி ... ரவி ... ரவி : ரவியா... சார்! யார் நீங்க? என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்? சாந்த தெரியும் தம்பி... தினந்தினம் நான் இந்த பீச்சுக்கு வருவேன். உங்க ரெண்டு பேரையும் பார்ப்பேன்! ரவி : நாங்க பேசறதை எல்லாம் கேட்பீங்களா? சாந்த அப்படி இல்லே... ஒரு சந்தர்ப்பம் கொடுன்னு கடவுளை உருகிக் கேட்பே பாரு... அது மட்டும்தான் என் காதிலே பலமாவிழும்! தம்பி, அந்த சந்தர்ப்பத்தை நான் உனக்கு கொடுத்தா நீ ஏத்துக்குவியா? ரவி : சார்... நீங்க என்ன சொல்றீங்க... சாந்த நான் ஒரு பணக்காரன்... எனக்குள்ள பணத்தை எப்படி செலவு பன்றதுன்னு தெரியாம திண்டாடுறவன்! உனக்கோ பணம் வேனும்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/56&oldid=777119" இலிருந்து மீள்விக்கப்பட்டது