பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இரண்டாம் குரல் போடா மடையா! நாம செய்யப் போறதுக்கு சாட்சி வேற இருக்கணுமாடா! டேய்! அங்கே நாய் குலைக்குற சத்தம் கேட்குது. ஒரு குரல் : ஆமா ஆமா! போய் பார்ப்போம் வா! எதுக்கும் நாம கொஞ்சம் ஜாக்ரதையாவேதான் இருக்கனும் . அவசரம் வேணும் வா வா (போகும் காலடி ஓசை) லட்சுமி (தனியே, மெதுவாக) அடப்பாவிப் பசங்களா! பட்டப் பகல்லயே இவ்வளவு தைரியமா! சட்டம் போலீஸ் எல்லாம் இருந்து என்ன பண்றது? ம்... போய் அந்த ஆளே என்னன்னு கேட்போம். ஹலோ! குமார் : (உள்ளிருந்து குரல்) என் பேர் குமாருங்க Miss. லட்சுமி : எங்கே இருந்து பேசுறீங்க... குரல் மட்டுந்தான் கேட்குது. ஆளையே காணுேமே! குமார் . இதோ இந்த பெட்ல படுத்து, போர்வையால. மூடிக்கிட்டு படுத்திருக்கேன். லட்சுமி (கோபமாக) வேற இடமே கிடைக்கலியா உங்களுக்கு? என் பெட் ரூம். அதுவும் என் படுக்கை! என். போர்வைதான் உங்களுக்கு கிடைச்சதா? குமார் : மன்னிக்கனும் மேடம்! தெரியாம நடந்துடுச்சு... லட்சுமி : என்ன காரியம் பண்ணிட்டீங்க (குழப்பம்) ஆள் இல்லாத வீட்டில, கன்னிப் பெண்ளுேட படுக்கையில... குமார் : ஆபத்துக்கு பாபமில்லிங்க... லட்சுமி உங்களுக்கு ஆபத்துன்ன, அதுக்கு நான் ஏன் பாபத்தை சுமக்கனும்? குமார் : நானும் ஒரு ஆபத்துக்கு உதவி செய்யப் போயி தான், இப்படி ஆயிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/38&oldid=777099" இலிருந்து மீள்விக்கப்பட்டது