பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சம் பொறுங்க காட்சி 1 உள்ளே சுந்தரி, வேல் முருகன், வரதன்: ஏகாம்பரம்: சரஸ்வதி. சுந்தரி, தன் பெற்ருேர்களை எதிர்பார்த்த வண்ணம் வாசலுக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டிருக்கிருள். நாற்காலியில் உட்காருகிருள், பின் பெருமூச்சுடன் எழுந்து வெளியில் பார்க்கிருள். சுந்தரி ஏழு மணியாச்சு இன்னும் வரலே! கூட்டத்துை பேசப்போன. பேசுளுேம், முடிச்சோம்னு வந்துட வேண்டியதுதானே! இன்னும் காணுேம் கூட்டமோட கூட்டமா ஒன்ன கலந்துட்டாங்க போல இருக்கு. பேச ஆளு கிடைச்சா அப்பா விடமாட்டாரே! அம்மாவும் கூட போனங்களே! வாங்கன்னு கைய பிடிச்சு இழுத்துக்கிட்டு வந்துடக் கூடாது. வரவர அம்மாவும் மோசம் நான் வீட்டில தனியா இருக்குறேன்னு ஒரு கவலை இருந் தாதானே. (கையில் வைத்திருக்கும் புத்தகத் துடன் எட்டிப் பார்க்கிருள். வேல் முருகன் வருகிருன்) நவ...9