பக்கம்:நலமே நமது பலம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 55

சில நாடுகளில் மாடுகளிடமிருந்து பால் கறந்து அதைக்

காய்ச்சாமல் குடிக்கிற குழந்தைகளுக்கு குடல் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறதென்றும் கூறுகின்றார்கள்.

உடலுருக்கி நோய் உடல் முழுவதும் உள்ள உறுப்புக்களைப் பாதித்து உருக்கி விடுகிறது. நுரையீரல் உடலுருக்கி நோய் (Lung Tuberculosis) என்பது பொதுவாக ஏற்படுகிற நோய்.

ஆனாலும் ஒவ்வொரு முக்கிய உறுப்பையும் பாதிக்கிற போது, அதன் பெயர் வேறுபடுகிறது. சான்றாகக் குடலில் பாதிப்பு ஏற்படுத்துகிறபோது அதற்கு குடலுருக்கி நோய் (intestine tuberculosis) என்றும் எலும்பைப் பாதிக்கிறபோது அதற்கு எலும்புருக்கி நோய் (Bone tuberculosis) என்றும் பெயர் பெறுகிறது.

நுரையீரல் உருக்கி நோய் பொதுவாக எல்லோருக்கும் எளிதாகப் பரவி விடுகிறது என்பதால், பரவும் வழிகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

உருக்கி நோய்க்கு ஆளான ஒருவர், இருமி கோழையைத் தரையில் துப்புகிறார். இவர் டம்போல் எங்கு வேண்டு மானாலும் அவர் துப்பித் தொலைக்கிறார்.

அந்தக் கோழைக்குள் ஆயிரக்கணக்கான உருக்கிக் கிருமிகள் ஒளிந்து கிடக்கின்றன. வெயில் அடித்துக் கோழை காய்கிற போது, அங்கு அடிக்கிற காற்றோடு உருக்கிக் கிருமிகள் பறந்து போய், எதிரே வருகிற மனிதர்களின் சுவாசத்தின் போது உடலுக்குள் புகுந்து கொள்கின்றன.

கிருமிகளை சுவாசித்த மனிதன் பலஹlனமாக இருக்கிற போது, அவனது நுரையீரல்களை எளிதில் ஆக்ரமித்துக் கொண்டு அரிக்கத் தொடங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/57&oldid=693230" இலிருந்து மீள்விக்கப்பட்டது