பக்கம்:ஊரார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&క్షీ கேசவன் மனைவி அவளேச் சந்தேகத்துடன் பார்த் தாள். சாமியார், வேட்டியின் ஒரு மூலையில் நீளமாகக் கிழித் தார். மத்திரித்தார். நாடா போல் கிழித்திருந்த துணியில் முடிச்சு மேல் முடிச்சாகப் போட்டுக் கொண்டிருந்தார். ஏழாவது முடிச்சின் போது கேசவன் கண் திறந்தான். "இனி உயிருக்குப் பயமில்லை. எடுத்துக்கிட்டுப் போங்க என்ருர் சாமியார். இதற்குள் ஊரே அரச மரத் தடியில் கூடிவிட்டது. ராஜாத்தி, சாமியார் காலில் விழுந்து கும்பிட்டாள். கேசவன் மனைவி அதையும் பார்த் தாள. 'தன் புருசன் மீது இவளுக்கு ஏன் இத்தனை கரிசனம்? ஏதோ ரகசியம் இருக்குது என்று எண்ணிக் கொண் டாள். "இன்னும் கொஞ்ச நாளேக்கு எண்ணெய்ப் பதார்த் தம் எதுவும் சாப்பிடக் கூடாது. உப்பில்லாப் பத்தியம் இருக்கணும் என்று சொல்லிக் கொண்டே சாமியார், முடிச்சுப் போட்ட துணியை அரச மரத்தில் கட்டி விட்டார். பாம்பு அம்புட்டுதாமா? கேவசன் மனைவியிடம் கேட்டார். ತಿರು-ಹಿ೦urd. ஓடிடுச்சாம்.: "அதுங்கண்ணப் புடுங்க... என்று சபித்தாள் ராஜாத்தி. "இருளனைக் கூப்பிட்டு பாம்பு கடிச்ச எடத்துலே "கொந்து போடச் சொல்லுங்க. வெசம் வெளியே வந்து ரும்' என்ருர் சாமியார். s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/34&oldid=758717" இலிருந்து மீள்விக்கப்பட்டது