பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மகேஷ்: என்னடா இது! இந்த குமாரும் மணியும் எங்கே போய்த் தொலைஞ்சானுங்க! சினிமாவுக்கு வேற டைம் ஆயிடுச்சு. ம்... சிகரெட் குடிச்சாத ன் Mood வரும். ம்... தீப்பெட்டி இல் லியே! அதோ அந்த பெரியவரு இந்தப் பக்கம் தான் வர்ரா ... அவரையே கேட்போம்! என்ன பெரியவரே! வத்திப்பெட்டி இருக்கா! கருப்: இல்லிங்களே! எனக்குப் பழக்கம் இல்லிங்க... மகேஷ்: என்னய்யா பெரிய மனுஷன்... புகை பிடிக்குற பழக்கம் இல்லாத மனுஷன் என்னய்யா பெரியா மனுஷன்? கருப்: தம்பியை பார்த்தா பெரிய மனுஷன் வீட்டு புள்ளை மாதிரி இருக்கு! தம்பி பேரு என்ன? மகேஷ்: என் பேரா! மகேஷ். கருப்: மசேஷ்ன்ன... மகேஷ்தான. இல்லெ வேற ஏதாச்சும் பேரா? மகேஷ்: என் அப்பா வச்ச பேரு மகேஸ்வரன்... அது கர்நாடகமா இருக்கறதுனல பேரை பேஷன மாத்திகிட்டேன். கருப்: தம்பி! நீ ரொம்ப அழகா இருக்குறியே! உங்க அப்பா ரொம்ப அழகா இருப்பாரோ?... மகேஷ்: (ஏளனமாக) எங்க அப்பன! ஐயோ! பேய்! பேரே கருப்பண்ணன்... கலரும் அப்படித்தான் பார்க்க சகிக்காது. சே! அவரை என் அப்பன்னு சொலலவே எரிச்சலா இருக்குது! கருப்: (தடுமாற்றத்துடன்) ஓ அப்படியா!... அப்ப நீ உங்க அம்மா மாதிரியே இருக்குற போலிருக்கு...