பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ அந்த நேரம் காட்சி 1 இடம்: காமாட்சி வீடு. உ.ளே காமாட்சி, பொன்னம்மா, சிங் காரம், காமாட்சி சேலையை ஊசியால் தைத்துக் கொண்டிருக்கிருள். அவள் கண்கள் கலங்கியிருக்கின்றன. தன்னை மறந்த நிலையில் அப்படியே அமந்திருக்கிாள். அப்பொழுது பொன்னம்மாள் உள்ளே வருகிருள்) பொன்: காமாட்சி, காமாட்சி என்ன இது. நானும் வந்ததிலேயிருந்து பார்க்கிறேன். துணியை ஊசியால தைக்குறியா இல்லே பார்வையிலேயே தச்சிடுறியா? என்ன ஆச்சு? துறு துறுன்னு கட்-ெறும்பு மாதிரி ஒரு இடத்து ல நிற்கமாட்டே உட்கார்ந்து போயிட்டே. ஏன் இப்படி? காமா: சமாளித்தவாறு எழுந்து) வா வா பொன்னு! ஒன்னுமில்லே ஏதோ கவலையில அசந்தட்டேன். என்னை ஏன் என்னுன்னு நீயாவது கேட்குறியே அது போதும். அட ஏன் அப்படி பார்க்குறே. என் மூஞ்சி என்ன சினிமா ஸ்டார் மாதிரியா இருக்குது?