பக்கம்:நலமே நமது பலம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. வாய்க்கு வாய் முறை: எல்லோராலும் தற்காலத்தில் ஏற்றுக் கொண்ட முறையென்று இதனையே கூறுகின்றார் கள்.

வாய் மூலம் வாய் வழியாகக் காற்றை உள்ளே செலுத்தி, உள்ளே நுரையீரல்களை இதமாக இயங்கத் தூண்டும் இந்த முறையைக் கீழே விளக்கமாகக் காண்போம்.

நீரில் மூழ்கியவரை முதலில் மல்லாந்து படுக்கவைத்து. முகத்தைச் சற்ற உயர்த்தி வைப்பது போல் வைக்கவும்.

வாய்க்குள்ளே இருக்கும் தண்ணிரை அல்லது சளியை அல்லது வாந்தி எடுத்திருந்தால் வெளியே வந்திருக்கும் உணவைத் துணியால் துடைத்து விட வேண்டும்.

பிறகு, அவரது முகவாயை நன்கு உயர்த்தி, அவரது நுரையீரல்களுக்குக் காற்றுப் போவதுபோல ஊதுவதற்கேற்ற வகையில் உயர்த்த வேண்டும். -

அவரது மூக்கினை வருடி, கட்டை விரலால் சற்று அழுத்தியவாறே ஊதுபவர் நன்றாக மூச்சை இழுத்துத் தம் பிடித்துக் கொண்டு, மூழ்கியவர் நுரையீரலுக்குள்ளே காற்றுப் போவது போல வேகமாக ஊதவேண்டும்.

இவ்வாறு ஊதும்போது, அவரது மார்பு உயர்வது போல ஊத வேண்டும். அப்படி உயரும்போது ஊதுபவர் தனது வாயை எடுத்து விட்டு, அவர் மூச்சை வெளியே விட வாய்ப்புத் தர வேண்டும். -

இவ்வாறு ஒரு நிமிடம் வரை ஊதிவிட்டு, பிறகு 3 வினாடிகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் தொடர்ந்து

ஊதவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/230&oldid=691048" இலிருந்து மீள்விக்கப்பட்டது