பக்கம்:நலமே நமது பலம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 17

அவர்களை வென்று அடிமைப்படுத்தி அரசாண்ட ரோமானிய மக்கள் உடல் நலத்தை, அது அளித்த பலத்தை, இராணுவத்தை வளர்க்கும் கருவியாகப் பயன்படுத்திக்

கொண்டார்கள்.

இந்திய நாட்டு மக்களோ, உடல் வளர்ச்சியை, அது நல்கிய உன்னத நலத்தை இறை வழிபாட்டிற்கும் இறைவனோடு தொடர்பு கொள்ளும் தெய்வாம் ச செயலுக்குமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

உச்சக்கட்ட இன்பம்:

வாழ்வில் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழச் செய்கின்ற சிறந்த நிலையை உடல்நலம் என்போமானால், அந்த உச்சக்கட்ட இன்பங்களை ஒவ்வொரு நொடியும் பெற்று, உலகுக் குச் சேவை செய்கின்ற வாய்ப்பைப் பெறுவதே, மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாக விளங்குகிறது.

இத்தகைய நிலை - உடலையும் மனதையும் தரமான தன்மையில் விளங்கச் செய்து, ஒவ்வொரு மனிதரும் திருப்தி யோடு என்ன செய்ய இயலுமோ அதனை ஆற்றலுடன் செய்து, அருமையாக வாழ்ந்திட வைக்கிறது.

மருத்துவமனைக்குச் செல்லாமல் நாம் வீட்டிலேயே இருக்கிறோம் என்பது மட்டும் நாம் நலமாக இருக்கிறோம் என்பதைக் குறிக்காது.

உடல்நலம் என்பது, உடல் உறுப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு மேலோங்கிய செயல்களை மேன்மையாகச் செய்வதுதான். தேர்ச்சியாக இயங்கச் செய்து திருப்தியையும் களிப்பையும் அளிப்பதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/19&oldid=691003" இலிருந்து மீள்விக்கப்பட்டது