பக்கம்:நலமே நமது பலம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 119

2.3. காயமடைந்தவர் சுயநினைவுடன் இருந்தாலும், வேறு விதமான உள் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும், நடக்க வைத்து அழைத்துச் செல்லலாம். அல்லது நாற்காலி இருக்கை போன்ற அமைப்பில் உட்கார வைத்துக் கொண்டு செல்லலாம். இந்த முறைகள் எல்லாம் இருக்கும் உதவியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. கைகளில் ஏற்படுகின்ற காயங்கள் (Arm injuries):

3.1. கைகளில் புஜங்களில் ஏற்படுகின்ற காயங்கள், மார்பில் ஏற்படுகின்ற காயங்களுடன் தொடர்புள்ளவை களாகவே ஏற்படுகின்றன. இதுபோன்ற சமயங்களில் மார்புக் காயம் அடைந்தவர்களைத் தூக்கிச் செல்லும் முறைகளில் ஏதாவது ஒன்றை, தகுந்ததாய் தேர்ந்தெடுத்துச் செயல்

LJL_60TLD. -

3.2. ஒரு கையில்தான் காயம் ஏற்பட்டது என்றால், ஒரே ஒரு உதவியாளர் தான் இருக்கிறார் என்றால், மனித ஊன்றுகோல் (Human Crutch) போல் செயல்படலாம். அதாவது காயம் படாத கைப்புறம் நின்று கொண்டு ஒரு கையால் அவரது முதுகுப் புறத்தை ஆதரவாக அணைத்தபடி, அவரது காயம்படாத கையால் தன் தோள் பகுதி கழுத்தைச். சுற்றிப் பற்றிக் கொள்ளச் செய்து, கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிச் செல்லும் முறையே இது.

3.3. இரு கைகளும் பாதிக்கப்பட்டு ஒரே ஒருவர் தான் உண்டு என்றால், தொட்டில் தூக்கு முறையைப் பின்பற்றலாம்.

3.4. இரண்டு பேர்கள் உதவிக்கு இருக்கிறார்கள் என்றால், நாற்காலி இருக்கை மூலமாகத் தூக்கிச் செல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/121&oldid=690928" இலிருந்து மீள்விக்கப்பட்டது