பக்கம்:நலமே நமது பலம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 23 மென்டலின் விதிகள்:

1. ஒரு பிறப்பில் இருந்து மற்றொரு பிறப்புக்காக, ஜீன்கள் சென்றாலும், அந்த ஜீன்கள் தமது குணங்களை விட்டு விட்டுச் சிறிதும் மாறாமல் அப்படியே தான் கொண்டு செல்கின்றன.

2. ஒவ்வொரு தனிப்பட்டவரிடத்திலும் (Individual) காணப்படுகிற ஜீன்கள் எப்பொழுதும் ஜோடி ஜோடியாகவே திகழ்கின்றன. தாய் வழி ஒரு ஜீனும் தந்தை வழி ஒரு ஜீனும் சேர்ந்து ஒரு ஜோடியாகிறது.

இந்த இரண்டும் ஒன்றாக இருந்தாலும் தமது குணங் களை ஒருபோதும் விட்டு விடுவதில்லை. ஒரு ஜீன் மிகுந்தெழுகிறபோது (Dominate), அதன் குணங்கள் வெளிப்படுகின்றன. மறைந்து கிடக்கும் மற்றொரு ஜீன் அடுத்த பிறப்பின் போது மிகுந்தெழுகிறபோது வெளிப்படுத்தும் தன்மையில் புதிய வளர்ப்பினைத் தருகிறது.

3. எப்பொழுதும் ஜோடியாக உள்ள ஜீன்கள் தனித்தன்மை வாய்ந்தவைகளாகவே செயல்பட்டுத் தங்கள் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவைகளாக விளங்குகின்றன.

மனிதப் பிறப்பும் மென்டலின் விதிகளும்:

மனிதரது பிறப்புகள் கொஞ்சம் கூடுதலான குழப்பம் கொண்டவைகளாகும். விருப்பப்படுகிற உறவினர்களுக் கிடையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/25&oldid=691056" இலிருந்து மீள்விக்கப்பட்டது