பக்கம்:நலமே நமது பலம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

/ /. 45a60c_Ggaa (Mumps):

இதைப் பொன் னுக்கு வீங்கி நோய் என்றும்

கூறுவார்கள். அல்ட்ரா மைக்ராஸ்கோபிக் வைரஸ் எனும் கிருமிகளால் தாடை நோய் உண்டாக்கப்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு 5 வயது முதல் 15 வயது வரை வருகிற நோயாக இது இருக்கிறது.

அறிகுறிகள்:

1. தாடையில் உள்ள சுரப்பிகள் வீக்கம் பெற்று, வலியை

உண்டாக்கும்.

2. இதுபோலவே காதுகளுக்கு அடி பாகத்திலும் வீக்கமும்

வேதனையும் மிகுந்திருக்கும். -

தற்காப்பும் தடுப்பு முறைகளும்:

1. நோயாளிக்குப் பூரண ஒய்வு தருவது அவசியம்.

2. குளிர்ச்சியும் ஜலதோஷமும் வராமல் பார்த்துக் கொண்டு, வீங்கிய பாகத்தில் ஒத்தடம் கொடுத்திட வேண்டும்.

3. மற்ற குழந்தைகளிடம் சேராமல், நோயாளிக்

குழந்தையைத் தனிமைப்படுத்திட வேண்டும்.

4. ஏறத்தாழ இந்த நோய் 3 வாரம் வரை நீடித்திருக்கும் என்பதால், எச்சரிக்கையுடன் மருத்துவம் பார்ப்பது நல்லது.

. /2. 6lgaarapc-Gyaa) (Diptheria):

டிப்தீரியா பேசில்லஸ் என்ற நோய்க் கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/54&oldid=693224" இலிருந்து மீள்விக்கப்பட்டது