பக்கம்:நலமே நமது பலம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 141

இனி எப்படி, சுவாசிக்க வைத்திட வேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொண்வது நல்லது.

7.1.1. மயக்கமடைந்து விட்டவருக்கு வாய்க்குள் காற்றுப் போகும் பாதையை முதலில் செய்து வழி பார்த்திட வேண்டும். மயக்கநிலையில், சுவாசத்தை அவரது நாக்கானது தடுத்துக் கொண்டிருக்கும்.

7.1.2. வாந்தி எடுத்தோ அல்லது மற்ற பொருள்கள் ஏதாவது வாயில் இருந்தாலோ அவற்றைக் கண்டு பிடித்து துடைத்து விடவேண்டும். அல்லது நீக்கி விட வேண்டும்.

வாயிலிருந்து வழிகிற நீரினை விரலால் அல்லது துணியால் துடைத்தெறிந்து விடவேண்டும். துகள்கள் ஏதாவது இருந்தாலும் துடைத்தெறிந்து விடுவது நல்லது.

7.1.3. வாயினுள் நாக்கை உயர்த்தி காற்றுப் போக வழிகிடைத்த பிறகு, ஒரு கையால் பாதிக்கப்பட்டவரின் முன் நெற்றிப் பகுதியை அழுத்திப் பிடித்தவாறு, தாழ்வாய் பகுதியில் மற்றொரு கையை வைத்து, தாழ்வாயை மேற்புறமாக உயர்த்திட வேண்டும்.

கழுத்தில் ஏதாவது காயம் அல்லது முறிவு ஏற்பட்டிருந்தால், கழுத்தை அசைக்கக் கூடாது. இருந்தாலும் வாயைத் திறக்கும் முயற்சியைக் கை விடாமல் தொடர்ந்து செயல்பட வேண்டும். -

7.1.4. இதுபோல் செய்த பிறகு, பதட்டப்படாமல் அமைதி காக்கவும். ஏனென்றால் உங்கள் சுவாசம் கட்டுப்பாட்டோடு ஒழுங்காக இருக்க வேண்டும். அத்துடன், பாதிக்கப்பட்டவரின் முன் நெற்றியில் வைத்திருக்கும் ஒரு கையால் மூக்கின் ஒரு பகுதியைக் கிள்ளிவிட்டு அடைத்திட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/143&oldid=690952" இலிருந்து மீள்விக்கப்பட்டது