பக்கம்:நலமே நமது பலம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 131

வருதல், மூச்சுத் திணறல் போன்ற அவ நிலைமைகளும் ஏற்படும். +

இந்த மிதமானதாக்குதல் தற்காலிகமானதுதான். இதயத் தசைகள் நிரந்தரமான பாதிப்புக்கு ஆளாகாத நிலையில் இருப்பதால், தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?:

1. மாரடைப்பு வந்தவர், தான் எப்படி இருந்தால் வசதியாக செளகரியமாக இருக்குமோ அந்த நிலையில் இருந்து (அமர்ந்து), உடனடியாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

2. உட்கார்ந்திருக்கும் நிலையில் இருப்பதுதான் அறிவுடைய செயலாகும். ஏனெனில் அப்போதுதான் இயல்பாக சுவாசம் நடைபெற ஏதுவாக இருக்கும். சுவாசம் சரியாக வந்தால் இரத்த ஓட்டமும் இதயத்திற்குச் சரியாக

ஏற்படும் வாய்ப்பைப் பெறும்.

3. இறுக்கமாக உடை அணிந்திருந்தால் தளர்த்தி விடவும். உடனே மருத்துவருக்கு ஆளனுப்பி அவர் வரும் வரை, இவரை நல்ல ஓய்வில் இருக்க ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

4. மாரடைப்பு ஏற்பட்டவர் எவ்வாறு சுவாசிக்கிறார்? அவரது நாடித் துடிப்பு எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவரது நாடித் துடிப்பின் எண்ணிக்கை 60 லிருந்து 100க்குள்ளாக இருக்க வேண்டும்.

5. நாடித்துடிப்பை அளக்க முடியாத அளவுக்கு தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு, துடிப்பு மந்தமாக இருந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/133&oldid=690941" இலிருந்து மீள்விக்கப்பட்டது