பக்கம்:நலமே நமது பலம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் * 197

24. இரவில் விளக்குடன்தான் சைக்கிள் ஒட்ட வேண்டும்.

இத்தனை விதிகளையும் பின்பற்றுவதுடன், தான் போகும் இடத்திற்குப் பத்திரமாகப் போய் திரும்பிவர வேண்டும் என்று எண்ணும் பாதுகாப்பான நினைவுடன்தான் சைக்கிள் ஓட்ட வேண்டும்.

எப்பொழுதும் அவசரப்படுவதும், பதட்டப்படுவதும் கூடவே கூடாது. நிதானமானது எப்பொழுதும் திடமான

ஆலோசனையையும் அளிக்கும்.

இனி விரைந்து செல்லும் வாகனங்கள் ஒட்டுபவர் களுக்கு வேண்டிய பாதுகாப்பு முறையினைக் காண்போம்.

4. வாகன ஒட்டுநர்கள் கவனிக்க:

பள்ளி மாணவர்களுக்கு வாகனங்கள் ஒட்டுவதற்குரிய வாய்ப்பு கிடையாது. ஏனெனில் வாகனங்கள் ஒட்டுதற்குரிய LGu 2 fluolo (Driving License) என்னும் சான்றிதழை போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடமிருந்துதான் வாங்க வேண்டும்.

உரிமம் வாங்குவதற்கு வயது வரம்பு உண்டு. அமெரிக்கா போன்ற நாடுகளில் 16 வயது என்று நிர்ணயித்திருக் கின்றார்கள். நம் இந்திய நாட்டில் 18 வயது என்பது விதிமுறை.

என்றாலும், வாகனம் ஒட்டுவதற்குரிய முறையினை

ஒரு சிறிது அறிந்து கொள்வது, சாலையில் செல்லும்போது பாதுகாப்பினைப் பெற வழிவகுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/199&oldid=691013" இலிருந்து மீள்விக்கப்பட்டது