பக்கம்:நலமே நமது பலம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 221

31. நீச்சல் குளத்தில் பாதுகாப்பு

/. நீச்சலும் நீச்சல் குளமும்:

நீறில்லா நெற்றி பாழ், நெய்யில்லா உண்டி பாழ், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்று ஒளவைப்பிராட்டியார், அழகு பற்றிக் கூறவந்தபோது அருமையாகப் பாடிச் சென்றிருக்கிறார்.

ஊருக்கு அழகு ஆறு என்றதுபோல, ஏரி, குளம், ஊருணி மற்றும் இயற்கையான நீர்த் தேக்கப் பகுதிகள் கிராமப் புறங்களில் இருந்தன. மக்கள் அவற்றில் நீந்திக் களித்து நிதமும் இன்பமும் அடைந்தனர்.

நீச்சல் பயிற்சியானது உடலுக்கும் மற்றும் உடல் உறுப்புக்கள் அனைத்துக்கும் ஆற்றலும் வலிமையும் தருகின்ற சிறந்த பயிற்சி என்று எல்லோராலுமே ஏகோபித்துப் பாராட்டப்படும் சிறப்பினைப் பெற்றதாகும்.

மேலே குறித்த இயற்கை நீர்த் தேக்கங்கள் இல்லாத போது, நகர வாழ் மக்கள் செயற்கையான நீர்த்தேக்க முறையை ஏற்படுத்திக் கொண்டு, இந்த நீச்சல் பயிற்சியின் பயன்களை யெல்லாம் தாங்களும் பெற முயன்றார்கள். அந்த ஆன்ற முயற்சியின் விளைவால் தான் நீச்சல் குளங்கள் (Swimming Pools) நாடு நகரமெங்கும் தோன்றின.

நீச்சல் குளங்கள் அமைக்கும் முறையில் நிர்மாணித் தவர்கள் மூன்று வித அமைப்பினில் உருவாக்கினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/223&oldid=691040" இலிருந்து மீள்விக்கப்பட்டது