பக்கம்:நலமே நமது பலம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

9. சாப்பிடும் உணவுப் பொருட்களைத் திறந்து வைத்திருப்பதால், பல்லி, அரணை போன்றி ஐந்துக்கள் விழுந்து, நச்சுத் தன்மையை உண்டாக்கி விடுகின்றன. உணவுப் பண்டங்கள் எப்பொழுதும் சுகாதார முறைப்படி மூடித்தான் வைக்கப்பட வேண்டும்.

10. மேலும், குழந்தைகள் படுக்கையில் தூங்கும்போது, முரட்டுப் போர்வையை எடுத்து முகமெல்லாம் மூடிக்

கொண்டு தூங்கும்போது, துணி அழுத்தி, மூச்சு முட்டி, இறந்து விடுவதும் உண்டு.

11. குளிர்சாதனப் பெட்டி (Refreigerater) உள்ளே குழந்தைகள் புகுந்து கொண்டு, தெரியாமல் தாங்களே பூட்டிக் கொண்டு உள்ளே மூச்சுத் திணறி இறப்பதும் உண்டு.

இதுபோன்ற காரியங்களில் எல்லாம் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. மின்சாரத் தாக்குதல்கள்:

மின்சாரத் தாக்குதல்கள் என்பது கொடுமையானதாகும். விளையாட்டாகவோ, பயிற்சி பெறுவதற்காகவோ அல்லது சோதனை செய்து பார்க்கலாம் என்றோ, மின்சார சம்பந்தப் பட்ட எந்த வேலையையும் பழக்கம் இருந்தாலன்றி செய்யக் கூடாது. -

அவ்வாறு ஏதேனும் செய்ய நேருங்கால், ரப்பர் கையுறைகளையும் ரப்பர் காலணிகளையும் உபயோகிக்க வேண்டும்.

ஆகவே, ஒளியைக் கொடுக்கும் மின்சாரமானது நம் உயிரைக் குடிப்பதற்கேற்ற வேலைகளில் நாம் இறங்கவே கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/212&oldid=691028" இலிருந்து மீள்விக்கப்பட்டது