பக்கம்:நலமே நமது பலம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

23. இரத்தக் கசிவுக் காயம் (Bruise)

வேகமான அடியினால் அல்லது மோதுதலினால் உண்டாகிற காயம், அதனால் தோலின் உட்புறத்தில் இரத்தக் கசிவு ஏற்பட்டுவிடும். அத்தகைய ஆரம்பக் கட்டத்தில் வலியும் இருக்கும். வேதனையும் வரும்.

இவ்வாறு உடம்பில் அடிபட்ட பிறகு, நாம் அதைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்திவிட்டு விடுகிறபோதும், அந்த அடிபட்ட இடம் மற்றும் அதைச் சுற்றிக் கன்னிப் போய் விடுகிறது. சில மையங்களில் எலும்பு முறிவு ஏற்படுகிற போதும் இந்த இரத்தக் கசிவு வருவதும் இயற்கைதான். வயதானவர்களுக்கும் இப்படி ஏற்படுவது சகஜம் என்கிறது மருத்துவத்துறைச் செய்தி.

பொதுவாக எல்லா இரத்தக் கசிவுக் காயங்களும், பயப்படும்படியான விபத்து அல்ல. நல்ல உடல்நலம் உள்ளவர்களுக்கு அதனால் அதிகம் பாதிப்பும் ஏற்படுவ தில்லை.

அதை அப்படியே விட்டு விட்டாலும் காலப்போக்கில் காயம் ஆறிவிடும். கடுமையும் மாறி விடும். இப்படிப்பட்ட காயமும் இரத்தக் கசிவும் எத்தனை நாட்களில் ஆறிப்போகும் என்று குறிப்பிட்ட கால அளவுகள் இல்லை. ஆனாலும் அந்த இரத்தக் கசிவுகளின் நிறங்களைப் பார்த்து (Coloration) ஆறுகிற நாட்களின் அளவையும் மதிப்பிட்டு விடலாம்.

அடிபட்டுக் காயம் அடைகிறபோது முதலில் இரத்தம் சிவப்பாகத் தெரியும். பிறகு அது நீல நிறத்தைப் பெறும். அடுத்து அது மாநிறம் (Brown) அல்லது தவிட்டு நிறம் பெறும். கடைசியாக மஞ்சள் நிறத்தைப் பெறும். பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/174&oldid=690986" இலிருந்து மீள்விக்கப்பட்டது