பக்கம்:நலமே நமது பலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 25

1. இரத்தம் உறைவதை ஏற்படாமல் தடுக்கும் வியாதி

ஒன்று, அதற்கு Haemophilia என்று பெயர்.

காயம்பட்டு விட்டால், அந்த இடத்தில் இரத்தம் உறைந்து தடைப்பட்டுப் போவது இயற்கை, அப்படி நடைபெறாமல் தடை செய்து, இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தாமல் சாகடித்து விடுகிற சதிகார நோய் இது.

2. பச்சை, சிவப்பு என்ற நிறங்களைக் காண முடியாதபடி உள்ள ஒரு நோய், நிறக் குருடு நோய் (Colour Blindness)

நிறக்குருடு உள்ளதந்தைக்குப் பிறக்கும் மகளுக்கு இந்த நோய் வராது என்றாலும், அவளுக்குப் பிறக்கின்ற மகனுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கெல்லாம் காரணம் ஜீன்களேயாகும்.

சுற்றுப்புறச் சூழ்நிலை (Environment):

ஒருவர் வாழ்கின்ற சுற்றுப் புறங்கள் எல்லாம், அவர் வாழ்கின்ற சூழ்நிலையாக அமைந்து விடுகிறது. அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்பவே அவரது வாழ்க்கை முறையும் தொடர்ந்து விடுகிறது.

ஆகவே, ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அவரைச்சார்ந்த சுற்றுப்புறச் சூழ்நிலையே கட்டுப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றன. -

ஒரு பெண் தாயாகக் கர்ப்பம் அடைந்த பிறகு, அவள்

வயிற்றில் வளரும் குழந்தை சுற்றுப்புறச் சூழ்நிலையின் காரணமாகப் பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/27&oldid=691058" இலிருந்து மீள்விக்கப்பட்டது