பக்கம்:நலமே நமது பலம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 129

15. Lom T600LLIL (HEARTATTACK)

இதயம் என்பது வலிமையான தசையாலான ஓர் உன்னதமான உறுப்பு. மூடிய கையளவு உள்ள இந்த உறுப்பு, உடல் முழுவதுக்குமான இரத்தத்தை அனுப்புகிற இணை யற்ற பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இதயமானது பெரிகார்டியம் என்கிற மெல்லிய உறையால் மூடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த மெல்லிய உறை வலிமை மிகுந்த திசுக்களால் ஆனதாகும்.

தடைபடாத இரத்த ஓட்டம் தேகத்தில் நடைபெறுகிற நேரம்வரைக்கும், எந்தவிதமான துன்பமோ, துயரமோ ஏற்பட்டு விடுவதில்லை. அதிலே சிக்கல் ஏற்படுகிறபோது தான், செயல்பாடுகள் சிதைந்து, சீரழிவும் ஏற்பட்டு விடுகிறது.

இப்படி ஏற்படுகின்ற பல துன்பங்களில் பெரிய துன்பம்தான் மாரடைப்பு என்பதாகும்.

மாரடைப்பானது, இதயத் தசையின் ஒரு பகுதியானது அதற்குக் கிடைக்க வேண்டிய இரத்தம் கிடைப்பதை இழக்கிறபோது ஏற்படுகிறது. இதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டு வருகிற தமணிகளுக்கு (Arteries), சிறிதளவு அல்லது முழுதுமாக பாதிப்பு ஏற்படுவதால் தான் இதயத் தசைகள் இரத்தம் பெறாமல் செயலிழந்து போகின்றன.

இவ்வாறு இரத்த ஓட்டம் தடைப்பட்டுப் போகிறபோது சில நிமிட நேரத்திற்குள்ளாக இரத்தம் பெறாத அந்த இதயத் தசைப் பகுதிகள் இறந்து போய் விடுகின்றன. இதைத்தான் மாரடைப்பு என்று கூறுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் LGunsmitiquus @6rcosGT6+6in (myocordial infarction) என்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/131&oldid=690939" இலிருந்து மீள்விக்கப்பட்டது