பக்கம்:நலமே நமது பலம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உரிமையையும் புரிந்து கொண்டு, அவர்களை மதிக்கவும் வளர்க்கவும் போன்ற பண்புகளைத் தருகிறது.

3. இத்தகைய இனிய பழக்க வழக்கங்கள், சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதுடன் வலிமைமிக்க நாட்டையும் படைக்கின்றன.

4. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்துறு போலக் கெடும் என்ற வள்ளுவர் வாக்குபோல, வருமுன்னர் காக்கின்ற வாழ்க்கையை வழங்கி நிற்கிறது.

5. விளையாட்டுக்கள் மற்றும் வீரச் செயல்கள் செய்தால் விபத்து வராதா என்ற கேள்வியைக் கேட்டு விட்டு, வீணே ஒதுங்கிக் கொள்ளும் சோம்பேறிகளுக்கு, வேண்டிய திறமையுடன் விதி முறைகளைப் பின்பற்றிச் செய்தால் விபத்து நிகழாது தடுக்கலாம் என்று கூறி, அஞ்சும் மனப்பான்மையை அகற்றி விவேகத்தை வளர்க்கிறது.

6. பாதுகாப்புக் கல்வியால் இனிய சுய கட்டுப்பாடு (Self control) மிகுந்து வருகிறது.

7. அதனால், ஒன்று கூடி உறவாடுதல், ஒருவருக் கொருவர் உதவி செய்தல், பெருந்தன்மையுடன் பழகுதல், பொது இடங்களில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுதல் போன்ற சிறந்த பண்புகள் செழித்தோங்க உதவுகிறது.

8. விபத்து ஒன்று நடந்தால் அதனால் விபத்துக்கு உள்ளானவருக்கு மட்டும் நஷ்டமல்ல. அவருக்கு உடல் வருத்தம், ஊதிய இழப்பு, முதலாளிக்கு உற்பத்திக் குறைவு. தொழிலில் விலைவாசி ஏற்றம். நாட்டிற்கு மூலப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/188&oldid=691001" இலிருந்து மீள்விக்கப்பட்டது