பக்கம்:நலமே நமது பலம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சிறு மயக்கம் ஏற்படுவதற்கு முன்பாக, ஒரு சில அறிகுறிகள் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கைதான்.

1. பாதிக்கப்படுகிறவருக்கு முதலில் தலை சுற்றுவதுபோல் தெரியும். தள்ளாமை ஏற்படும். நிலையாக நிற்க இயலாதது போல உணர்வு தோன்றும்.

2. முகம் வெளுத்துப் போகும். முத்துமுத்தாக நீர் வழிவதுபோல வியர்வை வெளிவரும்.

3. தோல் பகுதிகள் குளிர்ந்து போகும். தோலில் பிசுபிசுக்குத் தன்மையில் ஈரம் தேங்கி நிற்கும்.

4. நாடித் துடிப்பு பலவீனமாகத் துடிக்கும். ஒழுங்கற்ற தன்மையில் நாடித்துடிப்பு ஏற்படும். ஒரே சீராக இருக்காது.

குறிப்பு: நாடித் துடிப்பு என்பது ரத்த ஓட்டத்தினால்தான் ஏற்படுகிறது. நாடித் துடிப்பினைப் பரிசோதிப்பதன் மூலம் நாம் மூன்று விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

(அ) குறைந்த வேகத்தில் நாடித் துடிப்பு இருந்தால் அதற்கு, பிராடி கார்டியா என்பது ஆங்கிலப் பெயர்.

(ஆ) அதிக வேகத்தில் நாடித்துடிப்பு இருந்தால், அதற்கு டாக்கி கார்டியா என்பது ஆங்கிலப் பெயர்.

நாடித் துடிப்பில் இரத்தத்தின் சீரான இயங்குமுறையை அறிவதுடன் இரத்தக் குழாயில் செல்லும் இரத்தத்தின் அளவையும் அனுமானித்து அறிந்து கொள்ளலாம். இப்படி நாடித்துடிப்பு மாறுபாடுகள் பல்வேறு வியாதிகள் மூலமாகத்தான் ஏற்பட்டு விடுகின்றன.

5. வாந்தி எடுக்கிற உணர்ச்சி அடிக்கடித் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/160&oldid=690971" இலிருந்து மீள்விக்கப்பட்டது