பக்கம்:நலமே நமது பலம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுவதும் சறுக்கி விழுவதும் நேரும். பல சமயங்களில் உடலில் அடிபடுவதுடன் நின்று விடும். சில சமயங்களில் எலும்பு முறிவுகள் ஏற்படுவதும் உண்டு.

விளையாடுகின்ற ஆடுகளங்களில் காயம்படுவதும் சுளுக்கு, எலும்பு முறிவுகள் ஏற்படுவது என்பதும் சகஜமாக நடக்கக் கூடியவைதான்.

முறிவுகளில் சில வகைகள்

/. &#&Gu09 (90%/ (Simple Fracture):

இந்த எலும்பு முறிவு சாதாரணமாக எலும்பு முறிகிறது என்றாலும் சாதாரண காயமே ஏற்படும். அந்தக் காயம் ஏற்படுகிற இடத்தில் உள்ள திசுக்களுக்குத் தான் அதிக விளைவுகள் நேர்ந்திருக்கும்.

வெளிக்காயமோ அல்லது தோலுக்கு வெளியே எலும்பானது துருத்திக் கொண்டோ வந்திருக்காது.

2. &actCo (90%/ (Compound Fracture):

இந்த எலும்பு முறிவு வகையில், எலும்பு முறிந்திருக் கிறது என்பதுடன், வெளிப்புறமும் அதன் காயம் புலப்படும். முறிந்த எலும்பானது தோலுக்கு வெளிப்புறத்தில் துருத்திக் கொண்டு தெரியும்.

3. &#&Gungos(pools (Complicated Fracture):

இந்த எலும்பு முறிவில் எலும்பு முறிந்திருப்பதுடன் அதற்குப் பக்கத்தில் உள்ள சில உறுப்பும் காயமடைந்

திருக்கும். உதாரணமாக ஒருவர் ஓடுகிறபோது வழுக்கி விழுகிறார் என்றால் அவரது உள்ளங்கை எலும்புகள்

முறிவடைந்திருக்கும். அத்துடன் நில்லாது தோள் பட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/82&oldid=693279" இலிருந்து மீள்விக்கப்பட்டது