பக்கம்:நலமே நமது பலம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 45

கிருமிகளால் உண்டாகிறது. இது காற்று, புழுதி, காற்றிலே உள்ள நீர்த்துளிகள் போன்றவற்றின் மூலமாக வேகமாகப்

பரவுகிறது.

அறிகுறியும் அடையாளமும்:

1. தலைவலி, காய்ச்சல், உடல் முழுவதும் வலி என்று

இந்நோய் ஆரம்பமாகிறது.

2. மூன்றாம் நாள் காய்ச்சல் அடிக்கிறபோது முகம்.

கைகள், கால்களில் கொப்புளங்கள் தோன்றுகின்றன.

3. முத்து முத்தாக உண்டாகின்ற கொப்புளங்களின் உள்ளே சீழ் பிடிக்கின்றது. பிறகு அவை வெடித்து விடுகின்றன.

4. 10 நாட்களுக்குப் பிறகு கொப்புளங்கள் மறைந்து போனாலும், அவற்றினால் ஏற்பட்ட வடுக்கள் (Scars) என்றும் மாறாமல் தங்கிவிடுகின்றன.

5. கொப்புளங்கள் உடைந்து, அந்த இடங்கள் காய்ந்து இருப்பது போல் காணப்பட்டாலும், அவற்றுள்ளும் நோய்க்கிருமிகள் இருப்பதால், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்:

உடலில் தோன்றும் கொப்புளங்களைச் சுற்றி அரிப்பு ஏற்படும். சொரிந்து விடக்கூடாது.

அம்மை நோய் கண்டவர்களில் அநேகம் பேர் கண்கள் அல்லது முக்கியமான உறுப்புக்கள் பாதிப்புக்கு ஆளாவ

துடன், சில சமயங்களில் கண் போன்றவற்றை இழந்தும் விடுவதுண்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/47&oldid=693210" இலிருந்து மீள்விக்கப்பட்டது