பக்கம்:நலமே நமது பலம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 155

சில உதவிமுறைகள்:

1. மயக்கம் அடைந்தவருக்குக் குடிக்கத் தண்ணிரோ அல்லது உண்ண உணவுப் பண்டங்கள் எதுவுமோ தரக்கூடாது.

2. மயக்கம் அடைந்தவரைத் தனியே விட்டு விட்டுப் போய்விடாமல், கவனிக்க யாராவது ஒருவர் அருகில் இருந்து கொண்டே வர வேண்டும்.

3. மயக்கம் அடைந்தவரைச் சுற்றி நல்ல காற்றோட்டமாக இருப்பதுபோன்ற சூழ்நிலையை அமைத்து விட வேண்டும். -

4. சுவாசம் தடைபட்டு இருந்தால் செயற்கை சுவாச முறையைப் பின்பற்றவும்.

5. இதய ஓட்டம் தடைபட்டு இருந்தால் மாரடைப்பில் கூறப்பட்ட இதய ஓட்ட முதலுதவி முறையைப் பின்பற்றவும்.

6. காயம் ஏற்படும் இரத்தப்போக்கு இருந்தால், முதலில் அதைத் தடுத்து நிறுத்திட முயல வேண்டும். காயத்திற்கு முதலுதவி செய்யவும்.

7. மயக்கம் அடைந்தவர்களை மருத்துவ மனையில்

உடனே சேர்த்திட வேண்டும்.

முதலுதவிமுறைகள்:

1. மயக்கம் அடைந்தவருக்கு சுவாசப் பாதையில் அடைப்பு உள்ளதா இல்லையா என்பதை அறிந்து உறுதி செய்து கொள்ள வேண்டும். காற்றுப் பாதை அடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/157&oldid=690967" இலிருந்து மீள்விக்கப்பட்டது