பக்கம்:நலமே நமது பலம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் * 149

18. Sellir (Shock)

அதிர்ச்சி என்பது உடல் திசுக்களுக்குப் போதிய இரத்தம் பாய்ச்சப்படாததனால் ஏற்படுகிற பேரழிவு நிலையாகும். அதிர்ச்சி ஏற்படுவதானது இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் இயக்கம் ஏற்படாமல் போவதும், சில நேரங்களில் இறப்பு ஏற்படுவதும் போன்ற சூழ்நிலையைத் தோற்றுவிப்பது மாகும். -

உணர்ச்சி நிலையற்று மயக்கமடைந்திருக்கும்போது, வருகிற அதிர்ச்சியானது பெருந் துன்பத்தை உண்டாக்கி விடும்.

கடுமையான மாரடைப்பு ஏற்படுகிறபோது, ஒவ்வாமை யினால் உயிர்வாதனை ஏற்படுகிறபோது, இரத்த ஒழுக்கின் காரணமாக இரத்த இழப்பு ஏற்படுகிறபோது அல்லது பெருவாரி நோயின் (infection) காரணமாக வேதனைகள் நிகழ்கிறபோது இத்தகைய அதிர்ச்சி ஏற்படுகிறது.

அதிர்ச்சி ஏற்பட்டதற்கான அறிகுறிகள்: தோலானது வெளுத்துக் காணப்படுவது. உடல் பலகீனமாகத் தென்படு வது, பதட்டத்துடன் விரைவாகக் காணப்படும் நாடித் துடிப்பு மற்றும் இயற்கையாக நடைபெறாத ஒழுங்கற்ற சுவாசமுறை.

மன அழுத்தம், மன உலைச்சல் காரணமாக மயக்கம் ஏற்படும் என்பதெல்லாம் மக்களே நினைத்துக் கொண்டிருக்கிற மாயாஜாலம் போன்ற மூட நம்பிக்கைகளே.

தவறான ஊசிமருந்து:

மேலே கூறிய வழிகளில்தான் மயக்கம் வரும் என்றா லும், திடீரென்று எதிர்பார்க்காத நிலையில் திகைத் திடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/151&oldid=690961" இலிருந்து மீள்விக்கப்பட்டது