பக்கம்:நலமே நமது பலம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 125

ess, பத்திர நிலையாக வைத்திட வேண்டும். தவறி விழுதல், தடுமாறி விழுதல், தள்ளாடி தத்தளித்து விழுதல் எல்லாம் இந்தப் படிகளிலும் மாடிப் படிகளிலும், மொட்டை மாடிகளிலும்தான் நடைபெறுகின்றன.

14.1.4. வீட்டில் நடமாடும் இடங்களில் எல்லாம், ஆங்காங்கு வீட்டுப் பொருள்களும் விளையாட்டுப் பொருட்களும் வேண்டப்படாத பொருட்களும் இறைந்து கிடப்பதால், தட்டுத் தடுமாறி விழச் செய்கின்றன. இப்படிப் பட்ட பொருட்களுக்கு தட்டுமுட்டுச் சாமான்கள் என்றுதான் பெயர். பெயர் சரிதானே. ஆகவே, வீட்டை ஒழுங்காகவும் சுத்தமாகவும் வைத்துப் பாதுகாப்பதுதான் பத்திரமான வாழ்க்கை முறையாகும்.

14.1.5. திறந்த சன்னல்கள் ஒரம், படிக்கட்டுகள் ஒரம், மொட்டை மாடியில் குழந்தைகள் தனியாக இருப்பதைத் தவிர்த்து விட வேண்டும். -

/4.2. தீக்காயங்கள் ஏற்படுதல்:

14.2.1. தீக்காயங்கள் தற்செயலாக ஏற்படுவதுதான் என்றாலும், அறியாமையால் அது ஏற்படுவதில்லை. அலட்சிய மனப்பாங்கு, சிந்தித்துப் பார்க்க மறுக்கிற சீர் கெட்ட குணத்தால்தான் ஏற்படுகின்றன. அடுப்புக்கு மேலேயே துணிகளைத் தொங்க விடுவதும், காயப் போடுவதும் தீப்பிடிக்கக் காரணமாகி விடுகின்றன.

14.2.2. எரிகிற அடுப்பை அணைக்காமல் இருந்து விடுவதும், அடுப்புக்கு அருகே குழந்தைகளை விளையாட அனுமதிப்பதும், ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலாகி விடும்.

14.2.3. மின்சார சாதனங்களை சரியாகப் பொருத்தாத தும், பராமரிக்காமல் விடுவதும், எளிதில் தீப்பிடிக்க ஏதுவாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/127&oldid=690934" இலிருந்து மீள்விக்கப்பட்டது