பக்கம்:நலமே நமது பலம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் * 147

கூடும் என்பதால், அதிகக் கவனம் செலுத்தி அக்கறையுடன் உதவிட வேண்டும்.

8.1.2. இவ்வாறு செய்த பிறகும் அவரது நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், மருத்துவருக்கு உடனே தகவல் தெரிவித்துவிடவேண்டும்.

இந்த இடைப்பட்ட நேரத்தில், அவரது உடல்நிலையைக் குளிரச் செய்யக்கூடிய மற்றும் மனநிலையை அமைதியடையச் செய்கின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும்.

-

8.1.3. பாதிக்கப்பட்டவரின் அதிர்ச்சி (Shock)

சூழ்நிலையில் இருந்து அவரை விடுவித்து, வெளியேற்றிக் கொண்டு வர வேண்டும்.

(அதிர்ச்சி என்றால் என்ன என்பதன் விளக்கத்தை அதிர்ச்சி என்ற பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்).

8.1.4. அதற்குள் அவர் மயக்கமடைந்து விட்டால், அதிலிருந்து தெளிய வைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். (மயக்கமடைதல் என்பதன் விளக்கத்தை மயக்க மடைதல் என்ற பகுதியில் காண்க). அவரைத் தெளிய வைப்பதற்காக மல்லாந்து படுத்த நிலையிலிருந்து மாற்றி, குப்புறப் படுத்திருப்பதுபோலக் கை கால்களைப் பரப்பியிருப் பதுபோலப் படுக்க வைத்திருக்கவும்.

8.1.5. முடிந்தவரை பாதிக்கப்பட்டவரின் ஆடைகளைத் தளர்த்தி விடவும். அவரது முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளிக்கவும். நுரை மென் பஞ்சின் மூலம் (Spong) தண்ணிரை முகத்தில் தெளித்துத் தடவலாம். மற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/149&oldid=690958" இலிருந்து மீள்விக்கப்பட்டது