பக்கம்:நலமே நமது பலம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எந்தவிதப் பலன்களையும் அளிக்காது போயின. விபத்துக்குத் தொழிலாளர்களே காரணம் என்று முதலாளிகள் சாட்டிய குற்றத்துக்கு ஆளாகி, தொழிலாளர்கள் தோற்றார்கள். துவண்டார்கள். அமெரிக்காவை விட இங்கிலாந்தில் இந்தக் கொடுமை அதிகம் இருந்தது.

இருபதாம் நூற்றாண்டு வரை த்த நிலை நீடித்தாலும், பிறகு இன்சூரன்ஸ் மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்புப் பெற முடிந்தது. சட்டங்கள் பல ஆதரவாகத் தோன்றின. எந்திரங்களில் இருந்து விபத்து நேரா வண்ணம், பாதுகாப்புச் சாதனங்கள் தொழிலாளர்களுக்குத் தரப்பட்டன.

விபத்துக்குள்ளானவர்கள் முதலாளிகளின் அனு தாபத்தைப் பெறத் தலைப்பட்டனர். பண வசதியும் பெற முடிந்தது. இதனால் விபத்துக்கள் வரவரக் குறையத் தொடங்கின.

பிறகு தான் ஒரு முறையான பாதுகாப்பு விதிமுறைகள் தோன்ற ஆரம்பித்தன. அந்தப் பாதுகாப்புக் கல்வியின் முக்கிய நோக்கமானது - பாதுகாப்பு முறைகளை அதிகமாகப் புரிந்து கொள்ளுங்கள், அதன் படி நடந்து கொள்ளுங்கள், அனுதினம் சிறந்து நில்லுங்கள் என்பதுதான்.

இத்தகைய இனிய வாழ்வுதரும் பாதுகாப்புக் கல்வி முறை, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் பள்ளிக்கூடப் பாடத் திட்டங்களில் ஒன்றாகப் புகுத்தப்பட்டுப் பெருவாரியான அளவில் முன்னேற்றமடைந்து வருகிறது.

4. பாதுகாப்புக் கல்வியும் பள்ளி மாணவர்களும்

சிக்கல் நிறைந்த சூழ்நிலைகளுக்குள்ளே உலா வருகின்ற மாணவர்களும் இளைஞர்களும், சுற்றுப்புற அபாய நிலைகளில் இருந்து விடுபட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/186&oldid=690999" இலிருந்து மீள்விக்கப்பட்டது