பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

65


அணுக வேண்டும். பண்புடன் எதிர்க் குழுவினருடன் பழக வேண்டும். அதாவது விளையாடும் பொழுதுதான் அத்துடன் விளையாட்டின் விதிகளை முறையோடும் அனுசரிக்க வேண்டும்.

பொழுதுபோக்குவதற்காக மட்டுமல்ல - புகழ் பெற வேண்டும், பின் தொடர்ந்து வரும் எல்லாக் கவலைகளையும் அகற்றி ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றே விளையாட வருகின்றோம்.

பரந்த ஆடுகளம், ஆடும் இடமோ திறந்தவெளி. ஆகவே, மனமும் சூழ்ச்சிகளுக்கு அப்பால் சென்று திறந்த மனத்துடன், பரந்து பட்ட சகோதர உணர்வுடனே போட்டிகளில் இருக்க வேண்டுமென்றே பங்கு பெறுகின்றோம். பூரிப்புடன் ஆட வருகிறோம். பார்ப்பதற்கரிய போட்டி ஆட்டத்தை ரசிகர்களுக்குத் தருகிறோம்; எல்லோரும் மகிழ்கிறோம்.

இப்படியே போட்டி ஆட்டங்கள் நடக்க வேண்டும் என்பதுதான் ஆட்டத்தின் நோக்கம். ஆட்டத்தை நடத்தும் அதிகாரிகளின் ஏக்கம். ஏக்கம் தீர, நோக்கம் நிறைவேற, நாமும் நல்லுணர்வுடன் ஆடுவோம்.