பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கால் பந்தாட்டம்


முடிகின்றது. இந்த ஆட்டத்திற்கு நிறைந்த நெஞ்சுரம், (Stamina) நீடித்தப் பயிற்சி, நிலையான உடல் வளம், நிறைந்த குழு ஒற்றுமை வேண்டும் என்பதையும் என்றும் நாம் மறக்கவே கூடாது.

இடது கடைக் காப்பாளர்- எதிர்க்குழு வலப்புற வெளி முன்னாட்டக்காரர்

வலது கடைக் காப்பாளர்-இடப்புற வெளி முன்னாட்டக்காரர்.

நடு இடைக் காப்பாளர் - மைய முன்னாட்டக்காரர்

இடப்புற இடைக்காப்பாளர்- வலப்புற உள் முன்னாட்டக்காரர் வலப்புற இடைக்காப்பாளர்-இடப்புற உள் முன்னாட்டக்காரர்

என்றவாறு தடுக்கும் குழுவினர் தங்கள் பகுதிக்கு வரும் முன்னாட்டக்காரர்களைத் தெரிந்து வைத்து, அவர்களின் இயக்கத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற விடாது, விதியோடு தடை செய்து ஆடிவிட வேண்டும்.

இவ்வாறு தாக்கியும் தடுத்தும் ஆடுவதற்கேற்ற திறன் நுணுக்கங்களை சரிவரக் கற்றுக் கொண்டால் தான், ஆட்டத்தின் திறமை நிறையும். தவறுகள் குறையும். மகிழ்ச்சியும் பெருகும்.

என்னென்ன திறன் நுணுக்கங்கள், எப்படி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் இனி அடுத்த பகுதியில் காணலாம்.