பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

கால் பந்தாட்டம்


ஆடுகள மையத்தில், 'தனி உதை’ எடுக்கும் வாய்ப்புப் பெற்றால், இடைக்காப்பாளர் அந்தப் பந்தை உட்புற அல்லது வெளிப்புற முன் ஆட்டக்காரருக்கு வழங்கி, ஆடச் செய்ய வேண்டும். இந்த முறையானது, தடுக்கும் குழு காப்பாளரைக் காவல் எல்லையிலிருந்து கடத்திச் சென்று, காவலை உடைப்பதற்குப் பயன்படும்.

என்றாலும், எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் ஒடி வந்து பந்தைப் பெறுவதற்குள், அவர்களுக்கு முன்னால் ஒடி வந்து சுறுசுறுப்பாக இயங்கிப் பந்தை பெற்று ஆட வேண்டும். அவர்கள் சோம்பலுடன் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்துவிட்டு, பிறகு பந்தை எடுத்தோடுகின்ற போது, பின்னால் பந்துக்காக பரிதாபமாக ஒடி, விரட்டிடும் ஆட்டம் ஆடினால் என்றுமே பயனளிக்காது. பார்க்கவும் சகிக்காது.

'முனை உதை' எடுக்கும்போது தாக்கும் குழுவினர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

முனை உதை முறையாகவும் சரியாகவும் அமைந்து, இலக்கிற்குள் பந்து நுழைந்துவிட்டால் வெற்றிதான்.

'முனை உதை' சரியாக அமையவில்லை; எதிர்க்காற்றில் பந்தானது அந்த ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே வந்துவிட்டது என்ற நிலை உருவாகுமானால், அதை எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு, இந்த இலக்கை நோக்கி வந்து விடுவார்களே! அந்த சிக்கலான நிலை உருவாகிவிடாமல், தகுந்த பாதுகாப்பை முன்னரே வைத்துக் கொண்டுதான், முனை உதைக்கு வரவேண்டும்.

'முனை உதை' நிகழும்போது, தடுக்கும் குழுவினர், தங்களின் இரு கடைக்காப்பாளர்களையும் இரண்டு