பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

79


கம்பங்களுக்கருகே நிற்க வைத்துக் கொண்டு, இலக்குக் காவலனை இலாவகமாகப் பந்தைப் பிடிப்பதற்கேற்ற வகையில், முன்னும் பின்னும் தடையின்றி இயங்குதற் கேற்ப நிற்க வைத்திருப்பார்கள்.

அவர்களின் இடைக்காப்பாளர் மூவரும் முனை உதை எடுப்போரின் முன்னாட்டக்காரர் மூவரையும் பார்த்துக் கொள்ளவும்; மற்ற ஆட்டக்காரர்கள் மற்றவர்களைக் கண்காணித்துக் கொள்ளவும் போன்ற அமைப்பிலே ஆடச் செய்திருப்பார்கள். கவனமாக ஆட வேண்டும்.

ஆகவே, முனை உதை எடுப்பதில் யார் அதில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கின்றாரோ, அவரையே உதைத்தாடச் செய்வது நல்லது. பந்து இலக்குப் பகுதிக்கு முன்புறமாக வந்தால்தான், தலையாலிடித்து இலக்கின் உள்ளே தள்ள வசதியாக இருக்கும்.

'உள்ளெறியும்'போது இடைக்காப்பாளர்கள் அவரவர்க்குரிய எதிர்க்குழு இடைக்காப்பாளர்களையும், கடைக்காப்பாளர்கள் அவரவரின் பகுதியில் நிற்கும் மைய வலப்புற, இடப்புற முன்னாட்டக்காரர்களையும் பார்த்து, அவர்கள் இயக்கத்தைக் கண்காணித்துக் கொள்வதுடன்தாங்களே முதலில் பந்தைப் பெற்று ஆட முயல வேண்டும்.

இவ்வாறு தாக்கி ஆடும் பணியைச் செய்யும் முன்னாட்டக்காரர்கள் 5 பேர் என்று நமக்கு நன்கு தெரியும். அந்த ஐவரும் W என்ற அமைப்புடன் நின்று இயங்கி, எதிர்க்குழு இலக்குமீது தாக்குதல் நடத்தினால், எளிதாக இருக்கும். ஆனால், 5 பேர் முன்னாட்டக்காரராக இருந்து ஆடுவது பழங்கால முறை என்றும், இக்கால