பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

93


இவ்வாறு பிறரை ஏமாற்ற முயலும்போது, கால்களால் பந்தை முன்னும் பின்னும் உருட்டி, இழுத்து, அவர்களுக்குக் கிடைக்காதவாறு ஏமாற்றுதலே சமாளித்தலில் ஒரு பகுதியாகும். இதிலே விரைவும் நெளிவும் தேவை.

விரைவாகப் பந்துடன் ஒட வேண்டும். கால்களின், கட்டுப்பாட்டின் கீழ் பந்து எப்பொழுதும் இருக்க வேண்டும். திடீரென்று ஒட்டத்தை நிறுத்தும் போதும், பிறர் தடுக்கும்போதும் தடுமாற்றமடையாமல் தன் வசமுள்ள பந்தை அங்குமிங்கும் அலைந்து இழுத்துப் பின்னர் தன்னிடமே வைத்துக் கொண்டும் முன்னேறுவது.

இதை எப்படிச் செய்ய வேண்டும் என்றால், எதிராளிக்கும் பந்துக்கும் இடையில் தன்னை நிறுத்திக் கொண்டு, தன் முழு எடையை எதிராளி மேல் சார்த்திவிட்டுப் பந்தை தன் காலுக்கு எட்டும் துரத்தில் வைத்து விளையாடுவதுதான். இந்த சமயத்தில் ஒரு பக்கம் திரும்புவதுபோல மற்றொரு பக்கம் திரும்பி, ஒன்றைச் செய்வது போல் பாவனை காட்டி, மற்றொன்றைச் செய்து, பந்துடன் ஒடலே சமாளித்தலாகும்.

வெறுமனே பந்தைக் கொண்டு ஒடுவதால் எந்தப் பயனும் கிடைக்காது. ஏமாற்றத் தெரியாமல், கால்களுக்கிடையில் கட்டுப்பாடில்லாமல், பந்தை உருட்டிக் கொண்டிருப்பது கால்களுக்கும் ஆபத்து. குழுவுக்கும் பேராபத்து. ஆகவே, நல்ல அனுபவத் திறமையும், ஆற்றலும், எதிரியை ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கையை உடையவரும் தான் ஏமாற்றவும்