பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

55


முன்னே இருக்கும் எதிர்க்குழு உட்புற முன்னாட்டக்காரர் மேல் ஒரு கண்ணாக இருந்து, தமது குழு கடைக் காப்பாளருக்கும், மைய இடைகாப்பாளருக்கும் துணையாயிருக்கும் வகையில் பாதுகாப்பாக நின்று ஆட வேண்டும்.

வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, பந்துடன் எதிர்க் குழுவுக்கு முன்னேறிச் சென்ற பிறகு, பந்து எதிர்க் குழுவினரிடம் சிக்கிக் கொண்டுவிட்டால், 'ஐயோ' என்று தலையில் கைகளை வைத்துக் கொண்டோ, அல்லது ஏமாந்த நிலையில் இடுப்பில் கை வைத்துக் கொண்டோ அப்பத்தைப் பறிகொடுத்த அப்பாவிப் பூனைபோல் நின்று கொண்டிருப்பதால் எந்தவிதப் பயனும் விளையப் போவதில்லை. உடனே, தன் இடத்திற்கு ஓடி வந்துவிட வேண்டும். பந்து வைத்திருப்பவர் தன் பகுதிக்குள் இருக்கும்போது கூட பின் தொடர்ந்து சென்று தடுத்தாடிவிட வேண்டும்.

தமது குழு முன்னாட்டக்காரர்களுக்குப் பந்தை வழங்கி விட்டுத் தம் கடமை முடிந்தது என்று கருதியவாறு வேறு பக்கம் வேடிக்கைப் பார்க்காமல் இன்னும் சிறிது துரம் முன் நோக்கிச் செல்வதும், முன் ஆட்டக்காரருக்கு உதவி தேவைப்படும் பொழுது, பந்தை வாங்கி வழங்கி, இலக்கின் அருகில் பந்தை அனுப்பி முற்றுகையிட்டுத் தாக்கி ஆடி, பக்கபலமாக இருந்து ஆடவேண்டும்.

பந்து எதிர்க்குழுவின் பக்கம் இருந்தால் இடைக்காப்பாளர்கள் தாக்கும் குழுவாக ஆகிவிடுவார்கள். அந்த சமயத்தில், பந்து திடீரென தமது இலக்கை நோக்கி வந்துவிட்டால் என்ன செய்வது, அதை எப்படி சமாளிப்பது என்றவாறெல்லாம் எண்ணித் திட்டமிடுதல் காலச் சிறந்தது.