பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

கால் பந்தாட்டம்


பேசி முடிவு செய்து ஆடுகின்ற ஆட்டமுறையும், உறுதியோடும் வலிமையோடும் எதிரிகளைத் தாக்கித் தடுத்து சமாளிக்கின்ற திறனும், தடுக்கும் ஆட்டத்திலிருந்து தாக்கி ஆட ஓடுகின்ற ஒட்ட விரைவும், வேகமும், சிறந்த கடைக்காப்பாளருக்குத் தேவையான திறன்களாகும். தேர்ந்து கொள்ளுங்கள். சிறந்து விளங்குங்கள்.

4. இடைக்காப்பாளர்கள் (Half-Backs)

ஒரு குழுவிற்கு, சிறந்த இடைக்காப்பாளர்களே தூண்கள். கால்பந்தாட்டமானது எல்லோரும் ஒன்றிக் கலந்து ஆடுகின்ற ஆட்டமாக இருந்தாலும், முன் சென்று தாக்கி ஆடியும், பின்னால் வந்து தடுத்தும் ஆடுகின்ற நிலையிலேதான் இடைக் காப்பாளர்கள் இருக்கிறார்கள்.

பந்தைத் தடுத்தாடும்பொழுது, கடைக்காப்பாளர்களுக்குத் துணையாகவும், பந்தைத் தாக்கி ஆடும் பொழுது முன்னாட்டக்காரர்களுக்கு பக்கத்துணையாகவும், முடிந்தால் எதிர்க் குழு இலக்கினுள்ளே பந்தை உதைத்தாடி வெற்றி எண் பெறுகின்ற அருமையான ஆட்டக்காரர்களாகவும் மாறி ஆடக்கூடிய தன்மையிலேதான், இவர்கள் ஆடும் இடம் அமைந்திருக்கிறது.

ஆகவே, நன்றாக வேகமாக ஓடக்கூடிய வலிமையும், எதிரிகளை ஏமாற்றவும், பந்தை எடுத்துச் செல்லவும், தடுத்துக் கொள்ளவும், முன்னேறி வருவோரை வழியிலே மடக்கிவிடுவதும் போன்ற ஆற்றலை நிரம்ப உடையவர்களாகவும், இடைக்காப்பாளர்கள் கொண்டிருப்பது மிக மிக அவசியமாகும்.

இடைக்காப்பாளர்களாக மூன்று பேர் ஆடுகின்றார்கள். இம்மூவரும் முழு மனதுடன் ஒற்றுமை