பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடைவெளியைப் பார்த்து, அதனுள் தள்ளி வழங்கும் முறையை பயன்படுத்த வேண்டும்.

காற்றடிக்கும் வேகத்தினால், தூர இருந்தவாறே இலக்கை நோக்கிப் பந்தை உதைத்தாடுவதும், இலக்கின் குறுக்குக் கம்பத்தை ஒட்டினாற்போல் பந்து இலக்கினுள் நுழைவது போல, உயரமாகத் துக்கி எறிவதுபோல பந்தை உதைத்தாடுவதும், காற்றின் உதவியுடன் விளையாடும் பொழுது எளிது.

என்றாலும், காற்றின் வேகத்தினால், பந்து அதிகமாக உருண்டோடும். பந்து கால்களுக்குக் கட்டுக்கடங்காமல் போவதும் இயற்கையாக நடக்கக் கூடிய ஒன்று.

எனவே, எதிர்க்காற்றில் ஆடுவதைவிட, காற்றுடன் பந்தை விளையாடுவதும் சிறிது கடினமே. இதை மனதில் கொண்டு, மிகவும் கட்டுப்பாட்டுடன் ஆட வேண்டும்.

ஆக, எதிர்க்காற்றுடன் ஆடுவது எளிதா என்றால், அதுவும் கடினந்தான். பந்தை உயரத்தில் அடித்தாலும், காற்றின் வேகத்தால், அடித்த பக்கமே பந்து திரும்பி வருமே! அதனால், அருகருகே நின்று குறுக்கும் நெடுக்குமாக, கிட்டக்கிட்ட இருப்பதுபோல் குழுவினரை இருக்கச் செய்து பந்தை வழங்கியே முன்னேற வேண்டும்.

இதுபோல் வழங்கும் முறையை நடு ஆடுகளப் பகுதிக்குள் செய்யாமல், மைதானத்தின் ஒரப்பகுதிகளில் இருக்கும் ஆட்டக்காரர்களுக்கு வழங்கி, அங்கிருந்து எதிர்க் குழுவின் இலக்கை நோக்கிக் கொண்டு போகச் செய்ய வேண்டும்.