பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வளையல்

இதற்குமுன், மண்டலத்தின் உட்பிரிவாக நாடு என்பதே இருந்தது. அஃதாவது, தற்போதுள்ள மாநிலம், கூற்றம், (தாலுக்கா) என்பன போன்ற அமைப்பில் இருந்தது. மாவட்டம் என்பது போன்ற ஓர் அமைப்பில்லை, இது குறை என உணர்ந்து வள்நாடு (மாவட்டம்) என்னும் பகுப்பை ஏற்படுத்தினான். வள நாட்டின் உட்பிரிவாக நாடு அல்லது கூற்றம் அல்லது கோட் டம் என அவ்வவ்வற்றினது பரப்பின் பெருமை சிறுமைகளுக்கு ஏற்பப் பெயர் பெற்றது. அன்று அலற்றுள் அமைந்த பெரிய நகரம் தனியூர்' எனப்பட்டது. சிற்றார் 'ஊர்' எனப்பட்டது.

இப்புத்தமைப்புப் பணி இராச ராசனின் அரசியல்நெறித் திருப்பு முனையின் அடித்தளம் எனலாம். இவ்வமைப்பை அடி யொற்றியே இன்றைய நாட்டுப் பகுப்பமைப்பும் உள்ளமை நோக்கத்தக்கது. * . . . . .

இவ்வகையில் நாட்டுப் பகுப்பு, மண்டலம்-வளநாடு-நார் கூற்றம், கோட்டம்) தனியூர் (ஊர்) என அமைந்தது. ஓர் ஊரைக் குறிக்கவேண்டுமாயின் மண்டலந் தொடங்கி இராசரர்ச சோழ மண்டலத்து நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூர் எனக் குறிக்கப்பட்டது. ஆவணம், கல்வெட்டு, பதிவு. களில் இவ்வாறே குறிக்கப்படல் வேண்டும். -

ஆட்சியின் அடித்தளம் . . . . . . . . * : *... . . . . . - ... ."

நில அள.வ, நாட்டுப்பிரிவு அமைப்பின்மேல் ஆட்சிமுறை - வகுத்தமைக்கப்பட்டது. இராசராச சோழனின் அரசியல்

அமைப்பை அடிமட்ட அமைப்பிலிருந்து நோக்குவதே முறை யாகும். : ; . . . .” - ". . . . . . ... .

நிலவளத்தால் நலங்கனிந்த சோழ நாட்டில் சிற்றுார்கள் பல்கிப் பரந்து கிடந்தன. ஒவ்வொரு மண்டலத்திலும் பெரும் பகுதி சிற்றுார்ப் பரப்புக்களே. எனவே, சிற்றுார் ஆட்சி அமைப்பே ப்ெரும் பகுதி-மிகப் பெரும்பகுதி நாட்டாட்சி -ઇકી விடும். ஊராட்சியின் செம்மையே நாட்டாட்சியின் நன்மை யாகும். இராசராசனின் ஆட்சி அரசியல் நெறி இவ்வாறே திகழ்ந்தது. இந்த ஊர் ஆட்சியானது நூற்றுக்கு நூறு மக்களால்