பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிமன்றம் என்றால் ......

பட்டி மண்டபமா? பட்டி மன்றமா?

  • - - # * - - ע כ - என்பது இன்றைக்கு மக்கள் முன்னுள்ள ஒரு வினா

இவ்வினாவிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் சிதறி நின்று விடை பேசுகின்றன. கூர்ந்து கண்டு சிதறலை ஒன்று கூட்டிக் காணலாம்; காண்போம்.

பட்டி அரங்கம் பட்டி மன்றம் பட்டி மண்டபம்

- இவை மூன்றும் சொற்போர் நிகழ்ச்சியைக் குறிக்க வழங்கப்படும் பெயர்கள், மூன்றில் எது பொருந்தும்? மூன்றும் வெவ்வேறு பொருளைக் கொண்டவை. ஆயினும், ஒன்றிற் கொன்றுத் தொடர்புடையன.

அரங்கம்

அரங்கு என்பது உயரமான களம். அஃதாவது மேடை, சிலப்பதிகார அரங்கேற்று காதையில் நாட்டிய அரங்குக்கு நீளம், அகலம், உயரம் கூறப்பட்டுள்ளன. இதுகொண்டும் மேடை என அறியலாம். பிங்கல நிகண்டு நாட்டியமாடும் களத்தையும் சூதாடும் களத்தையும் அரங்கம்' என்கின்றது. சூடாமணி நிகண்டுப் போர்ப்பயிற்சிக் களத்தையும் சேர்த்துக் கூறுகின்றது.* சேந்தன் திவாகரம் என்னும் பழைய நிகண்டு, இவற்றுடன் புலவர் கூடும் அவைக்களத்தையும் சேர்த்து,

1. பிங் - 5 ( 2

2. சூடா. - இடம் : 53 : 1