பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு | 19

பகுதியில் வடுக மொழி பேசுவோர் பெரும்பாலோராக (நாயுடு மாராக) நிலங்களுக்கு உரியவர்களாக வாழ்கின்றனர். மேற்கில் புறவர் சேர்ந்து வாழ்ந்த சிற்றுரர் புறவர்சேரி என உள்ளது. அதனைப் பொருள் வைத்தசேரி என்று வழங்கவும் தொடங்கி அதற்குக் கதையும் கட்டியுள்ளனர். வடமேற்கே பள்ளங்களை மேடுபடுத்தித் தொழில் புரிவோர் திட்டர் என்போர் சேர்ந்து வாழ்ந்த சிற்றுார் திட்டர்சேரி - திட்டச்சேரி என்றுள்ளது. இப் பெயரன்றிப் பெயர்க்குரியார் தொடர்பும் இங்கில்லை. வடக்கே நாகரூர்க்கும் நாகைக்கும் இடையே பார்ப்பனர் சேர்ந்து வாழ்ந்த "பார்ப்பனர் சேரி இன்றும் பெயரலவில் உள்ளது.

இதுபோன்ற நிர்த்தன மங்கலம், சங்க மங்கலம், புத்தகுடி, புத்தரூர் - புத்துர் என்னும் சிற்றுார்கள் சைவ, சமண புத்த மதத்தார் இடம் பெற்றதன் நினைவாக உள்ளன என்றேன்.

'ஆம். இக்கடற்கரைக்கண்ணே உலவ வருவோரது தன்மை கொண்டும் உரையாடல் கொண்டும் யானும் உணர்ந்திருக்கின் றேன்-' என்று என் கருத்தை வழி மொழிந்து தன் பேச்சைத் தொடர்ந்தது வளையல் துண்டு:

எனக்கொரு பெருங்குறை உண்டு. அதனைக் குறிக்காமல் முடிக்க மனமில்லை. இப்பகுதி நகராக உருவாகவும். நாகர்பட் டினம், நாகரூர் எனப் பெயர் பெறவும் அடிப்படைக் கருவூலமான வித்து என் நாட்டுத் தோன்றல் இளந்திரையனே. அவன் இங்கு அமைந்து ஆள இந்நகர் ஒரு பீடு பெறாது போயிற்றே என்பதே அப்பெருங்குறை. என் செய்வது?- என்றொருபெரு மூச்சு விட்டது

ஆறுதலாக நான் சில சொல்லி வைத்தேன் : இளந்திரையன் ஆளாது போயினும், அவன் வழி வந்தோன் ஆண்டான் என்ப தற்குச் சான்றுகள் உள்ளன. “நாகப்பட்டினத்துச் சோழன்' என்று உரையாசிரியரால் குறிக்கப்படுகின்ற சோழன் இளந்

திரையன் வழி வந்த சோழனாக இருக்கலாம். இந்நகரை

22. பெரும்பாண் : 37 நச்சர் உரை