பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 6.130) 37 to joi)

அரங்கன், சிங்கன் வெண்காடன் ஆகிய இருவரிடம் தந்தனர் ஒப்புநோக்கு முடிந்து அறக்கட்டளை உருவாகியது. உடன் ஆனைமங்கலப் பகுதியை எல்லை கட்டி எல்லைக்கல் நாட்டும் பணிக்கு ஏற்பாடு நடந்தது. அதற்குரிய அலுவலன் நல்லூர் தம்மடிப்பட்டன், துப்பில் சீதரப்பட்டன் ஆகியோரை அழைத்து ஆனைமங்கலத்தில் இவ்வறக்கட்டளைக்குரிய நிலப் பகுதி எல்லையுடன் ஆணையிடப்பட்டது.

அவர்கள்.சென்று ஊரார் சூழ ஆனைமங்கலமுடையான் கோன் புத்த வேளான் யானைமேல் ஏறிவர, எல்லையை வலம் வந்து எல்லை சுட்டிக் கல்லை நாட்டினர். நாட்டார் யாவரும் கைச்சான்றிட்டனர். பின்னர் அவ்வோலை இராசராச மன்னன் அவைக்கு வந்தது. அரசுத் தலைமை அலுவலர்கள் இறுதியாக ஒப்புநோக்கினர். இராசராசன் ஆட்சி யாண்டு 25 நாள் 163 இல் கைச்சான்றிடப்பட்டு அறக்கட்டளை உறுதி

யாயிற்று.

இந்நாளில் ஆவணம் உறுதியாயினும் முன்கூட்டியே நடை முறைப்படும்படி அவனது ஆட்சியாண்டு 21 நாள் 96 முதல் பயன் கொள்ளும் முறையில் எழுதப்பட்டது.

இவ்வறக்கட்டளைச் செய்தி சூளாமணிவர்மனுக்கு அறிவிக் கப்பட்டது. அவன் கேட்டுப் பூசித்தான். ஆயினும் அவ்விகாரைக் கட்டி முடிப்பதற்குள் அவன் இயற்கையெய்தினான். அவன் மகன் மாற விசயோத்துங்க வர்மன் பணியைத் தொடர்ந்து நிறைவேற்றினான். தன் தந்தையின் நினைவாக அதற்குச் "சூளாமணி விகாரை' எனப்பெயரிட்டான். அத்துடன் அவ்வி காரையின் ஒரு பகுதிக்கு இராசராசப் பெரும் பள்ளி' என்று பெயரிட்டுத் தன் நன்றியுணர்வைப் பதித் தான்.

இவ்வறக்கட்டளை இராசராசனால் நிறைவேற்றப்பட்ட தாயினும் முறையாக உறுதிமுறி வாயிலாகச் சூளாமணி விகா ரைக்கு அது உரிமை செய்யப்பட்டது இராசராசன் மகன் இரா