பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாலைப் பாட்டு



சாலையிலே போகும் போது
ஜாக்கிரதை வேண்டும் !
சோலையல்ல சுற்றிப்பார்க்க
சுறுசுறுப்பு வேண்டும்!

பாதையிலே பள்ளம்மேடு
பார்த்துப் போகவேண்டும் !
காதைநன்கு பயன்படுத்தி
கவனம் என்றும் வேண்டும் !

முன்னும்பின்னும் பார்க்கவேண்டும்
முரட்டுத்தனம் வேண்டாம் !
கண்ணைத்திறந்து செல்லவேண்டும்
கற்பனையும் வேண்டாம் !

வாகனங்கள் வேகமாக
வந்துவந்து போகும் !
காகம்போல பார்த்துக்கொண்டே
கடந்துபோக வேண்டும் !

17

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/19&oldid=1341967" இலிருந்து மீள்விக்கப்பட்டது