பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பச்சைக்கிளியே வாவா

கிளியே வாவா வணக்கம்
கேட்பேன் தருவாய் விளக்கம் !

கொத்திக் கனியைத் தின்றதால்
கூரிய மூக்கும் வளைந்ததோ ?
நித்தம் நிறையநீ தின்றதால்
வளைந்தஉன் மூக்கும் சிவந்ததோ !

பச்சை நிறத்தில் உன்மேனி
பச்சை இலைகள் தந்தனவோ 7
கொச்சை யானப் பேச்செல்லாம்
குழந்தைகள் கற்றுத் தந்தனரோ ?

தலையை சாய்த்தே பார்க்கின்றாய்
தத்தித் தத்தி நடக்கின்றாய் !
கிளையை விட்டே தாவுகின்றாய் !
கேட்டேன் ஏனோ பறக்கின்றாய் ?

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/27&oldid=1341975" இலிருந்து மீள்விக்கப்பட்டது