பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 117

களையே கண்டனர். அவர்கள் காணுமளவு நாகரும் மேலோங் கிய நிலையிலும் வனப்பிலும் தோன்றினர். வந்தோர்பால் இவர் களே முன் நின்று தொடர்பு கொண்டனர்; உதவினர். தன்மை யோடு பழகும் பண்புகளை இவர்கள் பெற்றிருந்தனர். இவர் களது குடியிருப்பு அமைப்புகள் செவ்வனே காட்சியளித்தன. இப் பகுதி நாகரது பகுதி என்றே யாவரும் கருதுமாறு இருந்தது.

வெளி நாட்டார் வரவினால் பெருகிய வணிகம் இந்நகரில் பெருகியது. ஏற்றுமதி இறக்குமதிகள் புகார் போன்று பெருகின. இவற்றால் இப்பகுதி ஒரு பட்டினமாக துறைமுகமாக உருவா யிற்று. நாகரது குறிப்பிடத்தக்க வாழ்வாலும் வணிகப்பெருக் கத்தாலும் இணைந்த நிலையில் இந்நகர் நாகர்ப்பட்டினம்' என்று பெயர் பெறுவதாயிற்று. -

சீன நாட்டாரும், கடாரத்தாரும், ஈழத்தாரும், யவனத் தாருமாக வெளி நாட்டார் வணிகராகக் குழுமினர். புத்த மதத் திருவிடாகக் கருதி வந்தோரும் பலர். அதற்கேற்ப அம்மதப் பெருக்கமும் வளர்ந்தது. அது குறிப்பிடத் தக்க பெருங்கதை என்பர். என்ன அகல விழித்துப் பார்க்கின்றாய்?

ஆம் வியந்துதான் பார்க்கின்றேன். எமது நகரின் பெயரையே அறியாமல் இருந்து வருகின்றோமே என்ற அவலத் தினால் எழுந்த வியப்பு இது. ஊர்ப் பெயர் பற்றிய எண்ணமே எவருக்கும் எழுந்ததில்லை. எழுந்தவர்க்கும் நாகம்-பாம்பு பட்டினமாகவே பட்டது. ‘நாகநாதர்கோவில் இருக்கிறது பார்: அங்கு பாம்பு வந்து இன்றும் பாலும் முட்டையும் குடிக்கிறது பார்’ என்போரே காணப்படுகின்றனர். உண்மையை உணர்த்திய உனக்கு நன்றி என்றேன். * * -

நன்றி இருக்கட்டும். நாகர் பட்டினம் என்ற பெயரே அக் காலத்தில் நிலைத்தது. சோழ நாட்டுத் துறைமுகம் இதுதான் என்றமைந்தது. உறையூர்க்கண் இருந்த சோழப் பெருமன்னரது ஆட்சி அலுவலகங்கள் இங்கு அமைந்தன. வணிகச் செல்வர் களது வளமனைகள் பெருகின. பண்டசாலைகள் மலிந்தன. வணிகத் தொழிலகங்கள் தளம் பெற்றன. புத்தமதப் பெருஞ் சான்றோர் சைத்தியங்கள் அழகுற்றன. வந்து மீளும் வெளி நாட்டார்க்கு வளமனைகள் எழுந்தன. வந்தோரில் பெரும்