பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செல்வம் என்பது ஊடல்நலமே

செல்வம் என்பது பணமல்ல
செல்வம் என்பது உடல்நலமே!
செல்வத்தை சேர்க்க முயன்றிடுவோம்
செழிப்பாய்தினந்தினம் வாழ்ந்திடுவோம்

உடலை மறந்தால் நோய்கள் வரும்
உயிரை வாங்கும் வலிகள்தரும் !
உடலைக் காப்பவர் அறிஞர்களே
உடலக் கெடுப்பவர் மடையர்களே!

தூய்மை என்பது உடலழகு
வாய்மை என்பது மன அழகு
நேர்மை என்பது செயல் அழகு
நியாயம் என்பது அறிவழகு !

உடலை தூய்மையில் வைத்திடுவோம்
உண்மை உழைப்பை வளர்த்திடுவோம்
திடமாய் உடலைக் காத்திடுவோம்
தெம்பாய் இன்பம் படைத்தடுவோம்.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/18&oldid=1341966" இலிருந்து மீள்விக்கப்பட்டது