பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆட்டுக்குட்டி


மேமே ஆட்டுக்குட்டி
வீட்டில் வளரும் செல்லக்குட்டி !


கழுத்து மணியை ஆட்டுகிறாய்
காதைத் தொங்க விடுகிறாய் !
அழுத்த மாக நடக்கின்றாய்
யாரை எதிர் பார்க்கிறாய் ?


இரண்டு காலில் நிற்கிறாய்
எட்டித் தழையைப் பறிக்கிறாய் !
புரண்டு புரண்டு படுக்கிறாய்
பொறுத்து மெல்லக் கத்துகிறாய் !


மானைப் போல துள்ளுகிறாய் !
மயங்கி மூச்சை இழுக்கிறாய் !
யானை போலே தின்கிறாய் !
ஏனாே இப்படி இளைக்கிறாய்?

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/28&oldid=1341976" இலிருந்து மீள்விக்கப்பட்டது